உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் பிரதோஷ விழா

திருப்புத்தூரில் பிரதோஷ விழா

திருப்புத்துார்,திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் மற்றும் மேல ஆதிதிருத்தளிநாதர் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. மேலத்திருத்தளிநாதர் கோயிலில் மாலை 4:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 16 திரவியங்களால்அபிஷேகம் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் மேலத்திருத்தளிநாதருக்கும் அபிஷேகம்நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தளிநாதர் கோயிலிலும் மாலையில் நந்தீஸ்வரருக்கும் திருத்தளிநாதர் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !