பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா: அம்மன் ரத ஊர்வலம்
ADDED :3063 days ago
திருப்புத்துார்:திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் வசந்தப் பெருவிழா மே5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்ஸவர் அம்மன் ரதத்தில் எழுந்தருளினார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் ரதம் ஊர்வலமாக சென்று கோயிலுக்கு வந்தது.