வடமதுரையில் முற்றோதுதல் திருவிழா
ADDED :3063 days ago
வடமதுரை:வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் பொலிவிழந்த நிலையில் உள்ளது. இதனால் கோயிலில் திருப்பணி நடைபெற வேண்டி திருவாசக முற்றோதல் திருவிழா நடந்தது. பின்னர் மகேசுவர பூஜையும், சண்டேசநாயனார் சுவாமி ரத வீதியுலாவும், அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாட்டினை வடமதுரை ஒன்றிய சிவனடியார்கள் சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.