பின்னப்பூண்டி கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED :2774 days ago
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அடுத்த பின்னப்பூண்டி திரவுபதியம்மன் கோவிலில், இன்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், தீ மிதி விழாவும் நடைபெறுகிறது. மதுராந்தகம் வட்டம், பின்னப்பூண்டி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் அக்னி வசந்தோற்சவ விழா மே, 4ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நாடகம் நடைபெறுகிறது. இன்று காலை, அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீ மிதி விழாவும் நடைபெறுகிறது. தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா, நாளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.