பல்லடம் பத்ரகாளி கோவிலில் ஸ்ரீப்ரத்யங்கரா ஹோமம்
ADDED :2813 days ago
பல்லடம்:அதர்வன பத்ரகாளி பீடத்தில், ஸ்ரீப்ரத்யங்கரா தேவிக்கு, அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில்,பக்தர்கள் பங்கேற்றுவழிபாடு மேற்கொண்டனர்.
பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில், ஸ்ரீஅதர்வன பத்ரகாளி பீடம் அமைந்துள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில், ஸ்ரீமகா ப்ரத்யங்கராதேவி அருள்பாலித்து வருகிறார்.அமாவாசை நாளான நேற்று, ப்ரத்யங்கரா தேவிக்கு, சிறப்பு ஹோமம் நடந்தது. அமாவாசையை முன்னிட்டு, நேற்று (மே 15)ல் காலை, ஸ்ரீப்ரத்யங்கரா தேவி ஹோமம் நடைபெற்றது. அதன்பின், சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், ப்ரத்யங்கரா தேவி அருள்பாலித்தார்.