உடுமலையில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2706 days ago
உடுமலை:உடுமலை பள்ளபாளையத்தில், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.
கிராமத்தில், கடந்த 2006ம் ஆண்டில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் துவங்குகிறது.
அன்று, விஷ்வக்ஸேன ஆராதனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உட்பட பூஜைகள் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு மேல், திவ்யப்ரபந்த சேவாகாலம், யாகசாலை ஹோமங்கள், கோபுரம் மற்றும் மூலமூர்த்தி கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.