உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் மே 19ல் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி விழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 19ல் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி விழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா, மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

இரவு 8:30 மணிக்கு வெட்டி வேர் சப்பரத்தில்வைத்தியநாதசுவாமி, சிவகாமி வீதியுலா புறப் படுகின்றனர். கோயில் முன்பு தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

மே 25 இரவு 8:05 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மே 27 காலை 8:15 மணிக்கு தேரோ ட்டம், மே 28 ல் வைகாசி விசாகம், இரவு மண்டபம் எழுந்தருளல், மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடு களை கோயில் தக்கார் நாகராஜன், செயல் அலுவலர் நாராயணி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !