உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம், திருச்சி சாலையில், பால தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கிருத்திகையை முன்னிட்டு நேற்று, சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் முதலான, வாசனை திரவியங்கள் கொண்டு, அபிஷேகம் நடந்தது. பின்னர், முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !