கிருஷ்ணராயபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2704 days ago
கிருஷ்ணராயபுரம்: மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில், அமாவாசை முன்னிட்டு, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றங் கரையில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இதில், அமாவாசையான நேற்று (மே 15)ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதில், கரூர், குளித்தலை, லாலா ப்பேட்டை, சேங்கல் பகுதிகளில் இருந்து, ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.