குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: தேரோட்டம் கோலாகலம்
ADDED :2704 days ago
குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த ஏப்., 29ல், பூச்சொரிதலுடன் தொடங்கியது. 13ல், பெரிய பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 15)ல் காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நகராட்சி அலுவல கம், பஜனை மடம், அக்ரஹாரம் வழியாக சென்று, மதியம், 3:00 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. அதன் பின், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு, எட்டு கிராம மக்கள் பங்கேற்ற அரண்மனை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு, தொழிலதிபர்கள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட பலர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.