உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி விழா துவக்கம்

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி விழா துவக்கம்

சிவகாசி: சிவகாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன், சிவன் கோயிலில் வைகாசி பிரமோற்ஸவ விழா, நேற்று (மே 17)ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, விஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்மன் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடிமரம் முன்பு யாகசாலை பூஜை நடக்க, காலை 9:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பட்டர் சுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா மே 27 ல் நிறைவு பெறுகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிவதொண்டர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !