உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கச்சூர் கோவிலில் பூத்து குலுங்கும் கொன்றை

திருக்கச்சூர் கோவிலில் பூத்து குலுங்கும் கொன்றை

திருக்கச்சூர் : திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கொன்றை மரம், மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்குவதை பார்த்து, மரத்தின் கீழ் நின்று பலர், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.காட்டாங்கொளத்துார் அடுத்த மறைமலைநகர் அருகே அமைந்துள்ள, திருக்கச்சூர் பகுதியில் பழமை வாய்ந்த கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே மூன்று இடங்களில் சரக்கொன்றை மரங்கள் வளர்ந்துள்ளன.கோடையில் தான் இந்த மரங்களின் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்கும். அதன் படி, இப்போது அந்த மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மரத்தின் அழகை பார்த்து ரசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !