உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா

ராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் திருவிழா நேற்று காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் அமைந்துள்ள சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வஸந்த உற்சவத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும்,அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் காப்புக்கட்டுதல் நடந்தது. பின் கொடி கேடயத்தில் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்த பின்னர், கொடியேற்றப்பட்டது. உற்சவர்களான சவுபாக்கிய நாயகியும், ஆதிரெத்தினேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதியுலா வந்தனர். மே 25, காலை சவுபாக்கியநாயகி அம்மன் தவக்கோலத்தில் சிவபூஜை செய்யும் நிகழ்வும், மாலையில் சுவாமியும்,அம்மனும் மாலை மாற்றுதல் உற்ஸவமும்,இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. மே 26, மாலை திருக்கல்யாணமும், மே 28 ல் தேரோட்டமும் நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையினரும்,கோயில் அறங்காவலர்கள் குழுவினரும்,விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !