செங்கமடை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2711 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட புனித நீர் கருப்பர், முனீஸ்வரர், காளியம்மன் ஆலய கோபுரங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.