உலக நன்மைக்கான 1008 விளக்கு பூஜை
ADDED :3021 days ago
தேவிபட்டினம்: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து கிராமத்தில் உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்கான 1008 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் பகவதி அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ராஜ சொர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அழகன்குளம் அழகியநாயகி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரெத்தினம் குழுவினர் பூஜை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தலைவர் தர்மராஜ்,மாதாந்திர குங்கும அர்ச்சனை வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.