வித்யா கணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2711 days ago
பரமக்குடி;பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் காலயாகபூஜை துவங்கி, கோபூஜை, பூர்ணாகுதிக்குப்பின், கடம்புறப்பாடாகி விமான கலசத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனித நீரைகோபுர கலசங்களில் ஊற்றினர். பின்னர் வித்யா கணபதிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பள்ளி தலைவர்ராஜகோபால், தாளாளர் சுந்தரேசன், பொருளாளர் ரவிச்சந்திரன்,விக்ரம் கல்லுாரி தாளாளர் சீனிசேகர், ராகவேந்திரா மருத்துவமனைசேர்மன் முருகன், கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல்முருகன், டாக்டர்கள் மீனாட்சிசுந்தரம், பாலசுப்பிரமணியன், ஜெயஇந்திராமற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மகாதேவன் நன்றி கூறினார்.