மோகனூரில் சீதா கல்யாண உற்சவம்
ADDED :2711 days ago
மோகனூர்: மோகனூர், அக்ரஹாரத்தில் உள்ள, பக்தஜன பஜனை சபா மகாலில், 36ம் ஆண்டு, சீதா கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த, 18ல், விக்னேஸ்வர பூஜையுடன், சீதா கல்யாண உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, சீதாராமர் படம் வைத்து அர்ச்சனை, திருவிளக்கு பூஜை, வீணை இசை கச்சேரி நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு, கிராம உஞ்சவிருத்தியும், சீதா கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 7:00 மணிக்கு மஞ்சள் நீராடல், ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.