உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் பூஜாரிகளுக்கு தடை

கோயிலில் பூஜாரிகளுக்கு தடை

பண்ணைக்காடு: பண்ணைக்காடு ஆலடிபட்டி மத்திய ரஷேன் கடை பகுதியை குடிமகன்கள் பாராக பயன்படுத்துவதால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. பண்ணைக்காடு ஆலடிபட்டியில் டாஸ்மாக் செயல்படுகிறது. இங்கு பார் வசதியில்லாததால் குடிமகன்கள் ரோட்டோர தடுப்பச்சுவர்,ஓட்டல்கள், பொது இடங்களை பாராக பயன்படுத்திகின்றனர். டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள மத்திய ரஷேன் கடை வளாக பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் குடிமகன்கள் இரவு மற்றும் விடுமுறை நாட்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். வளாகப்பகுதியில் இவர்கள் விட்டு செல்லும் மதுபாட்டில்கள் , பிளாஸ்டிக் கப், உணவு பொட்டல குப்பைகள் குவியலாக காணப்படுகிறது. நாள்தோறும் ரஷேன் கடை திறப்பின் போது ஊழியர்கள் இதை அப்புறப்படுத்தி விட்டு பொருட்கள் சப்ளை செய்யும் நிலை உள்ளது. பொதுமக்கள் நடமாடும் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையால் இப்பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒதுக்குப்புறத்தில் கடையை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !