உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருக்கம்பள்ளத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

முருக்கம்பள்ளத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம், முருக்கம்பள்ளத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பர்கூர் ஒன்றியம், முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத விழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 4ல் விநாயகர் பூஜையுடன், திரவுபதி அம்மனுக்கு, அபி?ஷக, ஆராதனைகளுடன் கொடியேற்றப்பட்டது. தினமும், மதியம், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை, 18 நாட்கள், மகாபாரத சொற்பொழிவும், ஆறு முதல், தொடர்ந்து, 13 நாட்கள், இரவு, 9:00 மணி வரை, மகாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்தன. தொடர்ச்சியாக, நேற்று காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனன், பீமன் சண்டையில், துரியோதனன் இறப்பது போல், நாடக குழுவினர் நடித்துக் காண்பித்தனர். பின், மாலை, 6:00 மணிக்கு நடந்த குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, குண்டமிறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !