உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளாபுரியம்மனுக்கு ஜாத்திரை

கொள்ளாபுரியம்மனுக்கு ஜாத்திரை

பள்ளிப்பட்டு: கொள்ளாபுரியம்மன் மற்றும் கங்கையம்மன் கோவிலில், இரண்டு நாள் ஜாத்திரை கொண்டாட்டம் பள்ளிப்பட்டில் இன்று துவங்குகிறது. நாளை மறுதினம், கங்கையம்மனை நீர்நிலையில் கரைக்கின்றனர். பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளது கொள்ளாபுரியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஜாத்திரை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று காலை, சிறப்பு அபிஷேகத்துடன் கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை துவங்குகிறது. பிற்பகல், 1:00 மணியளவில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கின்றனர். இரவு, 10:00 மணிக்கு அம்மன் வீதியுலா புறப்படுகிறார். பள்ளிப்பட்டு நகரில் விடிய விடிய வலம் வரும் அம்மன், அதிகாலையில் மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைகிறார். இதை தொடர்ந்து, நாளை, கங்கையம்மன் ஜாத்திரை நடக்கிறது. காந்தி சிலை அருகே, நான்கு முனை சாலையில், வேப்பிலை குடிலில் கங்கையம்மன் எழுந்தருளுகிறார். திரளான பக்தர்கள் அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு, வேண்டுதலை நிறைவேற்ற காத்திருக்கின்றனர். நாளை மறுதினம் காலை, கங்கையம்மனை, சோளிங்கர் சாலையில் உள்ள நீர்நிலைக்கு (கசம்), ஊர்வலமாக கொண்டு சென்று, பக்தர்கள் கரைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !