வடபழனி ஆண்டவர் கோவிலில் நாக வாகன சேவை
 சென்னை: வட பழனி முருகன் கோவில், வைகாசி விசாக திருவிழாவில், நேற்று முன்தினம், நாக வாகனத்தில் வலம் வந்து, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 வடபழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, மே 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சென்னை, வடபழனியில் அமைந்துள்ள, வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் நாள் விழாவில், நாக வாகன சேவை நடைபெற்றது. நாக வாகனத்தில் வலம் வந்து, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
விழாவின் பிரதான நாளான, மே 25ம் தேதி காலை, 7:10 மணிக்கு, திருத்தேர் திருவிழாவும், இரவு ஒய்யாளி உற்சவமும் நடக்கிறது. 9ம் நாள் விழாவில், வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. வைகாசி விசாகமான, 10ம் நாள், வள்ளி - தேவசேனா சமேத, சண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், மயில்வாகன புறப்பாடும் நடக்கிறது.அதை தொடர்ந்து, மே 30ம் தேதி முதல், ஜூன் 8ம் தேதி வரை நடக்கும், விடையாற்றி உற்சவத்தில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.