உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழாக்கால இசைக்கருவிகள்

விழாக்கால இசைக்கருவிகள்

கோயில் விழாக்களில் பலவகையான இசை முழக்கங்கள் செய்யத்தக்கவை. இதற்கென பலவித இசைக்கருவிகள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றின் ஒலிகளை பஞ்சபூதங்களின் அடிப்படையில் ஐந்துவகையாக வாதுளாகமம் விளக்கிக் கூறுகிறது.

மஹாபூதவிகாராம்ச சப்தப் பஞ்சவிதஸ் ஸ்மிருத:
தாருஜம் பிருதிவீஜாதம் சங்கஜம்
சாப்ய முச்யதே.
ஆக்னேயம் லோஹஜநிதம்
வாயுஜாதம் துவம்சஜம்.
தாருஜம் சைவ சாங்கம் ச லௌஹம் கஷிர மேவச.
கேயம் ஸர்வஸமாயுக்தம் சப்தப் பஞ்சவிதஸ்
ஸ்மிருத:

மேற்கண்ட சிவாகம வசனத்தால் சப்தங்கள் பஞ்சபூத விகாரங்களே என்பதை உணரலாம். மேலும், தினமும் சூரிய உதயகாலத்தில் பஞ்சமகா சப்தத்தைச் செய்ய வேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்தியுள்ளன. இவ்விதம் அதிகாலை எழுப்பப்படும் ஐவகை ஒலிகளால் தேசத்தில் அசுபம் நீங்கிடும்; உயிரினங்களிடம் அறியாமை இருள் அகலும் என்று பயனும் கூறப்பட்டுள்ளது.

1. தாருஜம் - கட்டையிலிருந்து உண்டானது.
2. ஆப்யம் - சங்கத்திலிருந்து நீர் அம்சமாய் உண்டானது.
3. லோஹஜம் - வெங்கலம் முதலிய உலோகத்திலிருந்து வருவது.
4. சுஷிரஜம் - துளைகளிலிருந்து வருவது.
5. கேயம் - வாய்ப்பாட்டிலிருந்து வருவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !