உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்பன் கோவிலில் வருஷாபிஷேக விழா

வால்பாறை ஐயப்பன் கோவிலில் வருஷாபிஷேக விழா

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

வருஷாபிஷேக விழாவையொட்டி சபரிமலை, பம்பையில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து, சுவாமிக்கு சிறப்பு யாக பூஜை, அபிஷேக வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.அதன் பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !