உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில், பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில், பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, பட்டத்தரசி அம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில், அருள்மிகு பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன், கூப்பிடு விநாயகர், பாலமுருகர், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்கள் உள்ளன.

இங்கு பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டுதல் திருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது.தொடர்ந்து, பால்கம்பம் போடுதல், அணிக்கூடை, சுவாமி நகைகள் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் (மே 24)ல் சக்தி கரகம் அழைத்தல், அபிஷேக பூஜை, அக்னி கரகம் அழைத் தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மகா அலங்காரம், அன்னதானம் நடந்தது. மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறை வடைந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !