பல்லடம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு விழா
ADDED :2731 days ago
பல்லடம்: பல்லடம் அருகே அல்லாளபுரம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், 3ம் ஆண்டு விழா, ஸ்ரீசுதர்ஸன ஹோமத்துடன் நடைபெற்றது. விழாவில், காலை, 5.00 மணிக்கு நடை திறக்கப் பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. காலை, 9.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், திருமஞ்சனமும், ஸ்ரீசுதர்ஸன ஹோமம் துவங்கியது. பூமி நீளாதேவி, மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாளாக பாவிக்கப்பட்ட தீர்த்த கலசங்களுக்கு வழிபாடு நடந்தது. சுதர்ஸன ஹோமத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களுடன், பெருமாள் கருட வாகனத்தில்எழுந்தருளினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.