திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு சஞ்சீவி நகர் செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன் கோவில் திருவிழா 28ம் தேதி துவங்குகிறது
திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: சஞ்சீவி நகர் செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நாளை மறுநாள் (28ம் தேதி) துவங்குகிறது.
உழவர்கரை நகராட்சி, சஞ்சீவிநகரில் சஞ்சீவி விநாயகர், செங்கழுநீர் அம்மன், திரவுபதிய ம்மன், கெங்கையம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களின் பிரமோற்சவ
விழா நாளை மறுநாள் 28ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, 29ம் தேதி பகல் 12:00 மணிக்கு, கெங்கை அம்மன், மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணியளவில் செடல் உற்சவம் நடக்கிறது. 30ம் தேதி மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதல், 31ம் தேதி பகாசூரனுக்கு அன்னம் அளித்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
1ம் தேதி இரவு 8:00 மணிக்கு அர்ச்சுனன்-திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 2ம் தேதி இரவு கிருஷ்ணன் ரதம் ஓட்ட அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலா, 3ம் தேதி காலை
அர்ச்சுனன் தபசு ஏறுதல், இரவு 10:00 மணிக்கு கிருஷ்ணன், அர்ச்சுனன், திரவுபதியம்மன் வீதியுலா மற்றும் அரவான் கடபலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
4ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம், நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.