பழநியில் வைகாசி விசாக திருக்கல்யாணம்
ADDED :2727 days ago
பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வைகாசி விசாக விழா மே 22 முதல் 31 வரை நடக்கிறது.
நேற்றிரவு (மே 27)ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்ம், அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக் கோயில் அதிகாலை 4:00 மணி நடைதிறக்கப்படும்.
பெரியநாயகிஅம்மன் கோயிலில் மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.-