கும்பகோணம் மகாமக குளக்கரையில் சோடஷலிங்க சுவாமி கோவில் கொடுங்கை இடிந்தது
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள சோடஷலிங்க சுவாமி கோவிலின் கொடுங்கை(சன்ஷைடு) நேற்று மாலை திடீரென இடிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்தி லும் பிரம்மதீர்ததேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ் வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ் வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபா கேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ் வரர், சேஷஸ்தர பாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கள்கள் அமைந்து ள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். இந்நிலையில் நேற்று (மே28)ல்மாலை கிழக்கு கரையில் அபிமுகேஸ்வரர் கோவிலுக்கு எதிரே உள்ள பைரவேஸ்வரர்கோவிலின் கோபுரத்தில் உள்ள கொடுங்கை தென்மேற்கு பகுதியில் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்த இடத்தில் யாரும் இல்லாததால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த மண்டபங்கள் அனைத்தும் கடந்த 2016ம் ஆண்டு மகாமகத் திருவிழாவின் போது சீரமைக்கப் பட்டது. அப்படியிருந்தும், இந்த கொடுங்கை மழையின் காரணமாக இடிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக எனத் தெரியவில்லை.