உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீத்தடுப்பு சாதனங்கள்

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீத்தடுப்பு சாதனங்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீத்தடுப்பு சாதன ங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், 27 ஏக்கரில், 11 நிலைகளுடன், 75க்கும் மேற்பட்ட சன்னதிகளுடன் அமைந்து உள்ளது. தினமும், பல ஆயிரம் பேரும், பவுர்ணமி, மஹா சிவராத்திரி, கார்த்திகை தீப திருவிழா மற்றும் விசேஷ நாட்களில், லட்சக்கணக்கானோரும் வருகின்றனர்.பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில், கோவில் வளாகத்தில், 36 தீத்தடுப்பு சாதன ங்களை பொருத்தும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப் பாதை யில் உள்ள அஷ்டலிங்கம், துர்க்கையம்மன் கோவில் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப் பாட்டில் உள்ள மற்ற கோவில்களில், 34 என, மொத்தம், 70 தீத்தடுப்பு சாதன கருவிகள் பொருத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !