உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பழநி: வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பக்தர்களின் சரணகோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. வசந்த உற்சவம் என அழைக்கப்படும், வைகாசி விசாகத் திருவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மே 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பெரியநாயகியம்மன்கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருத்தேரேற்றம் செய்து, மாலையில் நான்கு ரதவீதியில் தேரோட்டம் நடந்தது. இன்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மே 30ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !