உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபிஷேகம்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நடந்தது. இன்று(மே 29) மொட்டையரசு திருவிழா நடக்கிறது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. 6:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைவிசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். திருப்பரங்குன்றம், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு வந்த குடங்களில் இருந்த பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு மதியம் வரை அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பல வகை காவடிகள் எடுத்து வந்தனர். முகங்களில் 12 அடி அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். 16 கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். காலை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சன்னதி தெரு மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !