வெயிலுகந்தம்மன் கோயிலில் நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் பரவசம்
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன்கோயில் பொங்கல்விழா மே 22 முதல் நடந்து வருகிறது. வெள்ளி ரிஷபம், தங்ககுதிரை வாகனங்கள் மற்றும் பல்லக்கில் அம்மன்  தினம் வலம் வந்து, மண்டபங்களில் வீற்றிருந்து அருள் பாலித்தார். 
முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கயிறுகுத்துதல், அக்னிசட்டி, கரகம் எடுத்தல், பல வேஷமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை நேற்று நடந்தன.பக்தர்கள் கோயிலில் அங்கப்பிரதட்சணமும் செய்தனர். விருதுநகர் மற்றும் சுற்றுகிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 4:00 மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. நாளை(ஜூன் 1) மாலை 5:00 மணிக்கு தேர் சுவடு பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 2 மாலை 4:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வர கொடியிறக்குதல் நடக்கும். ஜூன் 3 ல் அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வந்து, ஊஞ்சலில் வீற்றிருத்தல், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் நகர்வலம் மற்றும் வாணவேடிக்கை நடைபெறுகிறது.