உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாக விழா: பழநியில் இன்று நிறைவு

வைகாசி விசாக விழா: பழநியில் இன்று நிறைவு

பழநி, பழநி வைகாசி விசாகம் பத்துநாள் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று இரவு கொடி இறக்குதலுடன் நிறைவு பெறுகிறது.வைகாசி விசாக விழா மே 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியாக மே 27ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், மே 28ல் வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடந்தது.நேற்றுமுன்தினம் இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். நேற்று இரவு மயில்வாகனத்தில் திருவுலா வந்தார். விழாவின் கடைசிநாளான இன்று காலை மற்றும் இரவு சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை உலா வருகின்றனர். காலையில் திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !