பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
ADDED :2716 days ago
அவலுார்பேட்டை: பரையம்பட்டில் அக்னி வசந்த விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, பரையம்பட்டு கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா, 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி வரை 19 நாட்கள் நடக்கும் விழாவில், கோவில் வளாகத்தில் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 23 ம்தேதி அம்மன் திருக்கல்யாண விழாவும், நேற்று காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி விழாவும் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.