உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்பத்தி கோவிலில் திருத்தேர் உற்சவம்

பொன்பத்தி கோவிலில் திருத்தேர் உற்சவம்

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அன்று காலை திரவுபதி அம்மனுக்கும், கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும்
மகா தீபாராதனையும் நடந்தது. தினமும் இரவு வானவேடிக்கையுடன், மேளம் தாளம் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது, விழாவின் முக்கிய விழாவான தேர்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை திரவுபதி அம்மனுக்கும் கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு சாமி சந்திக்கும் நிகழ்ச்சியும், பகல் 12:00 மணிக்கு பூங்கரக ஊர்வலமும், தொடர்ந்து மாரியம்மனுக்கு சாகைவார்த்தலும் நடந்தது. அன்று மாலை 6:00 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பபட்ட தேரில் ஏற்றி வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !