உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா

சத்தியமங்கலம் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, மாகாளியம்மன் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சத்தியமங்கலம் அடுத்த, காந்திநகரில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் விழா,  மே 22ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வந்தனர். அம்மன் அழைத்தல், நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து, 12:00 மணியளவில், குண்டம் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர். மஞ்சள் நீராட்டு விழா, இன்று நடக்கிறது. வரும் ஜூன் 6ல், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !