முத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
ADDED :2717 days ago
திண்டிவனம்: திண்டிவனம் வாசவி கிளப் சார்பில், எம்.ஆர்.எஸ். கேட் அருகில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நடந்தது. நிகழ்ச்சியில், பிரபாகரன், நாகராஜன், வாசவி கிளப் துணை ஆளுநர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் சங்கர், மனவளக்கலை பிரபாகரன், தலைவர் நாகராஜன், செயலாளர் ஹரி புருஷோத்தம்மன், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.