பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி
ADDED :2718 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி திருஞானசம்பந்தருக்கு பொற் கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டப்பட்டது.
விழாவை முன்னிட்டு பால், பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம் உள்ளிட்ட சோடஷ அபிஷேகம் என்னும் 16 வகை அபிஷேகம் திருஞானசம்பந்தருக்கு நடந்தது. பின்னர் பொற் கிரீடம் சூடி அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் திருஞானசம்பந்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓதுவா மூர்த்திகள் தேவாரப்பாடல்களை பாட பொற்கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப் பட்டது. விழாவில் சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் உலா வந்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.