பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பாலூட்டும் விழா
ADDED :3021 days ago
பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டும் விழா நடந்தது. ரிஷபவாகனத்தில் சிவன் பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்ஸவ மூர்த்திகள் கோயிலை வலம்வந்தனர். அதன்பின் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதணை நடந்தது. அம்பாள் இடமிருந்து பொற்கிண்ணத்தில் ஞானப்பால் பெறப்பட்டு, திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.