வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ புஷ்ப யாகம்
ADDED :2723 days ago
விழுப்புரம்: வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, புஷ்பயாகம் நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 20ம் தேதி பகவத் அனுக்ஞை, மிருத் ஸங்கிரனம், அங்குரார்பணம், கருட பிரதிஷ்டையுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் அம்ச வாகனம், சிம்ம வாகனமம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை உற்சவர் சுவாமிக்கு புஷ்பயாகம், விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.