உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொற்பந்தல் சிவன் கோவில் பாதுகாக்க வலியுறுத்தல்

பொற்பந்தல் சிவன் கோவில் பாதுகாக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்: பொற்பந்தலில், பராமரிப்பு இல்லாமல் சேதமாகி வரும், சிவன் கோவிலை சீரமைக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்
பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம்,  பொற்பந்தல் கிராமத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, பழமை வாய்ந்த அனுமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 200 ஆண்டுகளுக்கு முன் கருவறையில் இருந்த, லிங்கத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய லிங்கம் வடிவமைத்து, கோவில் கருவறையில் வைத்து வழிபடத் துவங்கினர். ஏற்கனவே, கோவிலில் இருந்த பழைய லிங்கத்தை பூஜிக்காமல், ஏரிக்கரையின் ஒரு பகுதியில் பாதுகாப்பின்றி கை விட்டதாக கூறப்படுகிறது. ஏரியில் இருந்து மீண்டும் சிவலிங்கத்தை எடுத்து வந்து, கோவில் கருவறையில் வைத்து, இரண்டு லிங்கத்திற்கும் ஆராதனை செய்து தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.இக்கோவில் கட்டடம், தற்போது மிகவும் சிதிலமடைந்து, நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவிலின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், மழைக் காலத்தில் கோவில் கட்டடத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, இக்கோவிலை சீர் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !