செல்வ விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2789 days ago
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரில், செல்வ விநாயகர், கருப்பண்ணசாமி, சப்த கன்னிமார் கோவில் மகா கும்பாபி?ஷகம் நாளை நடக்கிறது. விழா துவக்க நிகழ்ச்சியாக, காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள், பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, கணபதி ?ஹாமம், நவக்கிரஹ ?ஹாமம், மாலையில் கும்ப வழிபாடு, முதற்கால பூஜை நடக்கிறது. நாளை, காலை, 8:30 மணிக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது.