உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் கோயிலில் திருப்பணிகள்

திருவாதவூர் கோயிலில் திருப்பணிகள்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குட்பட்ட திருவாதவூர் வேதநாயகி திருமறைநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள், ரூ.25 லட்சத்தில் பிப்ரவரியில் துவங்குகின்றன."திருவாரூர் தேர் அழகும், திருவாதவூர் கொடுங்கையழகும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இக்கோயிலின் பழமையான 16 கால் கல்மண்டபத்தில், அழகிய வேலைபாடுகளுடன் கொடுங்கை(சன் ஷேடு) வடிவமைக்க பட்டுள்ளது. வைகாசி திருவிழாவில், இம்மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுவார். தற்போது இம்மண்டபம் சேதமடைந்துள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள வாயுதீர்த்தம், பிரம்ம தீர்த்தம் பயன்படுத்த முடியாத அளவு மோசமாக உள்ளது.

கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது : அடுத்தமாதம் கும்பாபிஷேக பணிகள் துவங்குகிறது. ராஜகோபுரத்திற்கு ரூ.7 லட்சம், கோயில் மேல்தளத்தில் தட்டு ஓடுகள் அமைப்பது, வளாகத்தில் பொற்றாமரைக்குளத்தில் பெயர்த்தெடுக்கப்பட்ட கருங்கற்களை பதிப்பது உட்பட மொத்தம் ரூ.25 லட்சம் செலவில் திருப்பணிகள் நடக்கின்றன. இதற்காக உபயதாரர்களை அணுகி வருகிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !