உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலநாதர் கோயிலில் 23ம் தேதி தெப்பத் திருவிழா!

குற்றாலநாதர் கோயிலில் 23ம் தேதி தெப்பத் திருவிழா!

குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வரும் 23ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா 10 நாட்களும், ஆனி மாதம் நடராஜ பெருமானுக்கு சபாபதி அபிஷேகமும், ஆடி மாதம்ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சந்தனக்காப்பு அலங்காரமும், பத்ர தீப விழாவும், ஆவணி மாதம் நடராஜருக்கு சுக்ல சதுர்த்தி அபிஷேகமும், புரட்டாசி மாதம் பராசக்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் நடக்கும்.மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவின் 10 நாட்களும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடக்கும். தை மாதம் மகம் நட்சத்திரத்தில் குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை, இலஞ்சி குமாரருக்கு தெப்பத் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு தெப்பத் திருவிழா வரும் 23ம் நடக்கிறது. தெப்பத் திருவிழாவை கண்டு களித்து கோயில் வெளிப் பிரகாரத்தில் அருள் பாலிக்கும் மணக்கோல நாதரை தரிசனம் செய்தால் திருமணம் இனிதே ஈடேறி தம்பதியர் சிறப்பாக வாழ்வர் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !