ஆதி நாகநாத சுவாமி கோயிலில் வசந்தோத்ஸவ விழா
ADDED :2724 days ago
பரமக்குடி, பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதி நாகநாத சுவாமி கோயிலில் வசந்தோத்ஸவ விழா நடந்தது. மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மேலும் பூக்குழி உற்ஸவம், பால்குடம் என பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.