செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக துவக்க விழா
ADDED :2724 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு குப்புசாமி லே-அவுட்டில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோவிலில் நாளை (3ம் தேதி) கும்பாபிஷேக, 3வது ஆண்டு துவக்க விழா நடைபெறுகிறது. விழாவை யொட்டி, நாளை அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6:00 மணிக்கு செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இதனை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், 9:00 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி சுப்ரமணியம் தலைமையில் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.