அத்தனூர் அம்மன் கோவிலில் வள்ளி கும்மியாட்டம்
ADDED :2723 days ago
சூலுார்:சூலுார் அத்தனுார் அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, வள்ளி கும்மியாட்டம் நடந்தது.சூலுார் மார்க்கெட் ரோடு, அத்தனுார் அம்மன் கோவில் திருவிழா, மே 15ம் தேதி துவங்கியது. மே 30ம் தேதி காலை, நொய்யல் ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடங்களுடன் அம்மை அழைத்தல் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், மாவிளக்கு அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.செலக்கரச்சல் வெள்ளியங்கிரி, கந்தம்பாளையம் முருகசாமி, சுல்தான்பேட்டை கோவிந்தசாமி குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் இரவு நடந்தது. நேற்று முன்தினம், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று அம்மனுக்கு ஊர் அபிேஷகமும், வரும் 5ம் தேதி மகாமுனி மற்றும் சங்கிலி கருப்பராயனுக்கு படையல் பூஜையும் நடக்கிறது.