விநாயகர் கோவிலில் திருப்பணி பூஜை
ADDED :2798 days ago
சென்னை: நங்கநல்லுாரில் உள்ள, வரசித்தி விநாயகர் கோவிலில் புனருத்தாரண கட்டுமான திருப்பணி மேற்கொள்வதற்கான பூமி பூஜை, இன்று நடக்க உள்ளது. சென்னை, நங்கநல்லுாரில் உள்ள வரசித்தி விநாயகர் திருக்கோவிலின் கட்டுமான திருப்பணிகளை மேற்கொள்ள, கோவிலின் கும்பாபிஷேக கமிட்டி முடிவு செய்து உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன.இதன்படி, வரசித்தி விநாயகர் கோவிலில், இன்று காலை, 9:59 மணி முதல், 10:30 மணிக்குள், வேத விற்பன்னர்கள் முன்னிலையில், பூமி பூஜை நடைபெற உள்ளது.