லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2797 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. திண்டிவனம் கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவம், கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், நேற்று (ஜுன் 4) காலை 6:45 மணிக்கு நடந்தது. திந்திரிணீஸ்வரர் கோவில் அருகிலிருந்து புறப்பட்ட தேரோட்டத்தை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் வடம்பிடித்து துவக்கி வைத்தார். இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கடேசன், சி.வி. ராதாகிருஷ்ணன், ராம்டெக்ஸ் வெங்கடேசன், பி.ஆர். எஸ். ரங்கமன்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாடவீதி வழியாக வந்த திருத்தேரை, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.