அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :2984 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்துவர். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று எண்ணப்பட்டது. இதில், 99 லட்சத்து, 68 ஆயிரத்து, 714 ரூபாய், 242 கிராம் தங்கம், 850 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.